Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

மார்ச் 20, 2019 10:33

தமிழ்நாடு: வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நேர்காணல் முறை பெரியது என்பதாலும் ஜனநாயக முறையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என்பதாலும் வேட்பாளர்கள் தேர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். 

21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்! கமல் ஹாசன் 
   
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கி வரும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இன்று இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. 


இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 21 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். 

மக்களவைத் தொகுதிகள்: 
ஸ்ரீபெரும்புதூர் - சிவகுமார் 
அரக்கோணம் - என்.ராஜேந்திரன் 
வேலூர் - சுரேஷ் 
கிருஷ்ணகிரி - ஸ்ரீகாருண்யா 
தருமபுரி - ராஜேசேகர் 
விழுப்புரம் - அன்பின் பொய்யாமொழி 
சேலம் - பிரபு மணிகண்டன் 
நீலகிரி - ராஜேந்திரன் 
திண்டுக்கல் - சுதாகர் 
திருச்சி - வீ.ஆனந்தராஜா 
சிதம்பரம் - ரவி 
மயிலாடுதுறை - ரிஃபாயுதின் 
நாகப்பட்டினம் - குருவையா 
தேனி - எஸ்.ராதாகிருஷ்ணன் 
தூத்துக்குடி - பொன்.குமரன் 
திருநெல்வேலி - வென்னிமலை 
கன்னியாகுமரி - எபினேசர் 
வட சென்னை - ஏ.ஜி.மௌரியா 
மத்திய சென்னை - கமீலா நாசர் 
திருவள்ளூர் - லோகரங்கன் 
புதுச்சேரி - சுப்ரமணியம் 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 
‘24-ம் தேதிக்குள் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்படும். நான், எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதும் அப்போது அறிவிக்கப்படும். தி.மு.க, அ.தி.மு.க அறிவித்த வாக்குறுதிகள் நீண்ட காலமாகவே அறிவிக்கப்பட்டு வருகிறது. 

வாக்குறுதிகளைவிட அதனை நிறைவேற்றுவதுதான் முக்கியம். மக்கள் நீதி மய்யம் அதனைச் செய்யும். வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நேர்காணல் முறை பெரியது என்பதாலும் ஜனநாயக முறையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என்பதாலும் வேட்பாளர்கள் தேர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்