Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டுப்படகு மீனவர்கள், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை: அதிகாரி

செப்டம்பர் 24, 2020 06:23

திருநெல்வேலி: ''திருநெல்வேலி மாவட்டத்தில், வட மேற்கு வங்கக் கடலில், காற்றின் வேகம் காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள், கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை,''  என்று ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குனர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு, மேற்கு மத்திய மற்றும் வட மேற்கு வங்கக் கடலில், காற்றின் வேகம், மணிக்கு 45 கிலோமீட்டர்  முதல், 55 கிலோமீட்டர் வரையிலும்,  இருக்கக் கூடும்! என்பதாலும், கடுஞ்சீற்றம் காரணமாக,  கடலில் அலைகளின் உயரம்,  3.3 மீட்டர் முதல்,  3.7 மீட்டர் வரையிலும் இருக்கக் கூடும் என்பதாலும்,  கடற்கரைக் கிராமங்களைச் மீனவர்கள் யாரும், கடலுக்குள்  மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை மையம்  எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது.

ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்ட, அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வருமாறு:
திருநெல்வேலி மாவட்டத்தின், கடலோரக் கிராமங்களான, கூடுதாழை, கூட்டப்புளி,  கூட்டப்பனை, கூட்டப்புளி, கூடங்குளம், கூத்தங்குழி,  தாமஸ் மண்டபம், விஜயாபதி, உவரி,  இடிந்தகரை, பெருமணல் ஆகியவற்றில் இருந்து,  நாட்டுப்படகு மீனவர்கள், மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர், கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீனவர்கள் அனைவருக்கும் கணிசமான" அளவுக்கு, வருவாய் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர்கள் பாதுகாப்பு கருதி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்