Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் விரிவாக்க அலுவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பு

செப்டம்பர் 24, 2020 06:59

தேனி: சின்னமனுர்  அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வேளாண் விரிவாக்க அலுவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடந்தது..
தேனி மாவட்டம் சின்னமனுார்  அருகே உள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வேளாண் துறை விரிவாக்க அலுவலர்களுக்கான வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது. மையத்தின் முதுநிலை விஞ்ஞானி முனைவர் திருமுருகன் வரவேற்புரையில் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்

தேனி உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் முத்துலட்சுமி பங்கேற்று தற்போது உள்ள வேளாண்மை பிரச்சினைகள் மற்றும் அவற்றை சமாளிக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார். நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் புதிய ரகங்கள் மற்றும் பயிர் மேலாண்மை குறித்து உழவியல் தொழில் நுட்ப வல்லுநர் மகேஸ்வரன் பயிற்சியளித்தார்..மண் வள பாதுகாப்பு ஓருங்கிணைந்த ஊட்டச்சத்து வேளாண்மை மற்றும் மண் மாதிரி செய்முறைகள் குறித்து மண்ணியல்தொழில் நுட்ப வல்லுநர்  அருண்ராஜ் பயிற்சியளித்தார்

தோட்டக்கலை தொழில் நுட்ப வல்லுநர் ராஜாராமன் மேம்படுத்தப்பட்ட நாற்றாங்கால் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் பாலிஹவுஸ் சாகுபடி முறைகள் குறித்து பயிற்சியளித்தார். பயிர் பாதுகாப்புத்துறை வல்லுநர் செல்வி சுமிதா ஓருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் மக்கச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை குறித்தும் பயிற்சியளித்தார்.

மனையியல் தொழில் நுட்ப வல்லுநர் ரம்யாசிவசெல்வி ஊட்டச்சத்து தோட்டம் குறித்து மதிப்புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளித்தார்..இப்பயிற்சியில் தேனி வோளாண்மைத்துiறையை சார்ந்த வட்டார அளவிலான அலுவலர்கள் பங்கேற்றனர். திட்ட உதவியாளர்  விண்மதி நன்றி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்