Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் ஐக்கியம்

செப்டம்பர் 24, 2020 07:12

ஆடுதுறை: சுவாமிமலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்தில் வேளாண்மை துறை அமைச்சரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணு முன்னிலையில் மாற்று கட்சி இளைஞர்கள் திருமங்கலக்குடி காதர் தலைமையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி ஆடுதுறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பாரதிமோகன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், முத்துகிருஷ்ணன், கருணாநிதி, அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்குசேகர், பாலமுருகன், தங்க நடராஜன், செல்வராஜ், சதிஷ்ராஜ், ராஜகுமாரன், சார்லஸ், காமராஜ், பாலாஜி, சரவணன், ராமசாமி, வண்ணக்குடி மகேஷ், ஜானகி காமராஜ், சிவக்குமார், சுப்பிரமணியன், இளங்கோ, முருகன், சிங் ரமேஷ், செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்