Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கன்னிமார் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி

செப்டம்பர் 24, 2020 07:18

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில், மொத்தம் 64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, கன்னிமார் குளம் கடந்த 40 வருடங்களாக, பராமரிப்பின்றி, தூர்ந்து போன நிலையில், பயன்பாட்டுக்கு தகுதியற்றதாக இருந்து வந்தது.

அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனமான, மேலப்பாளையம் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சங்கம், தற்போது கன்னிமார் குளத்தை, "நமக்குநாமே" முறையில், தூர்வாரி, ஆழப்படுத்தி சீர்படுத்தி உள்ளதைத் தொடர்ந்து, அதன் கரையோரங்களில், மொத்தம் ஆயிரத்து 275 பலன்தரும் மரக்கன்றுகளை, நடும் பணிகளை, அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மரங்கள் வளர்க்கும் ஆர்வத்தை,  சிறார்களிடையே இளம் வயதிலேயே ஏற்படுத்திடும் நல்லெண்ணத்தில், அங்கு  மரக்கன்றுகள் நடும் பணிகளில், சிறுவர்-சிறுமிகள் பங்கேற்றனர். சங்கத் தலைவர் அப்துல் முத்தலீப், செயலாளர் கே.எம்.செய்யது முகம்மது புகாரி சேட், பொருளாளர் பி.எம்.காஜா மொய்தீன் உட்பட பலர், கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்