Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்பாசமுத்திரத்தில் வெள்ள அபாய மீட்பு பணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி

செப்டம்பர் 24, 2020 07:24

திருநெல்வேலி: திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில், வடகிழக்கு பருவமழை வெள்ள அபாயமீட்புப் பணிகளுக்கான, ஒத்திகை நிகழ்ச்சியை தீயணைப்பு துறை வீரர்கள் நடத்திக் காட்டினர். திருநெல்வேலி மாவட்டம்,  அம்பாசமுத்திரம், சின்ன சங்கரன் கோயில் அருகில் உள்ள, தாமிரபரணி ஆற்றில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி வழிகாட்டுதலின்படி, அம்பாசமுத்திரம் தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில்,  தீயணைப்பு வீரர்கள்  அருணாச்சலம், பன்னீர்செல்வம், கோபால குமரேசன், ஐயப்பன், முருகமணி, ஜான் வினிஸ்டன், ஆகியோர், தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து,  வடகிழக்கு பருவ மழையின் போது,  ஏற்படும் வெள்ள அபாய காலங்களில்,  மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என்பது குறித்த, ஒத்திகை நிகழ்ச்சிகளை, நடத்திக் காட்டினர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை,  மீட்பது, நீரில் தத்தளிப்பவரர்களை கயிறு கட்டி காப்பாற்றுவது, படகின் உதவியுடன் பலரையும் மீட்பது,  மிதவை உபகரணங்களைக் கொண்டு ஒவ்வொருவரையும் காப்பாற்றுவது உள்ளிட்ட,  பல்வேறு செயல் விளக்கங்களை, மிகவும் தத்ரூபமாக,   தீயணைப்பு வீரர்கள்,   செய்து காண்பித்தனர். பார்வையாளர்களை, வெகுவாகக் கவர்ந்த, இந்த ஒத்திகை நிகழ்ச்சியினை, நடத்திக் காட்டிய, அம்பாசமுத்திரம் தீயணைப்பு வீரர்களை, பலரும் வெகுவாகப் பாராட்டினர்.
 

தலைப்புச்செய்திகள்