Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்பாசமுத்திரத்தில் சாக்கடை கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயத்தில் மக்கள்

செப்டம்பர் 24, 2020 07:26

திருநெல்வேலி : திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில், கடுமையான சுகாதாரக்கேடு. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுத்துவதுடன் தொற்றுநோய் பரவும்ம், அபாயம் உள்ளதால்  கழிவுநீர் ஓடையை, சுத்தம் செய்து தர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தின், மிகச்சிறிய நகராட்சியான, அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட,   17வது வார்டு,  கீழப் புதுத்தெருவில் இருந்து, துர்க்கை அம்மன் கோவில் செல்லுகிற வழி வரையிலும் உள்ள, கழிவு நீர் ஓடை  பதினைந்து நாட்களுக்கும் மேலாக, சுத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளது.

இதன் காரணமாக,   அப்பகுதியில் உள்ள, ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும்,  கழிவுகளும், சாக்கடைநீரும்,  தேங்கி நிற்கின்றன. இவற்றால், கடுமையான  துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சுத்தொல்லையும்,  அதிகரித்துள்ளது. இதனால்,   பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

எனவே, அம்பாசமுத்திரம் நகராட்சி சுகாதார பணியாளர்கள் உடனடியாக கீழப் புதுத்தெருவில் இருந்து, துர்க்கை அம்மன் கோவில் செல்லுகிற வழி வரையிலும் உள்ள, கழிவு நீர் ஓடை, சுத்தம் செய்து உதவுமாறு, அம்பாசமுத்திரம்,   நகராட்சி நிர்வாகத்திற்கு, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்