Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கில்லாடி வேலை பார்க்கும் மோடி : நிபுணர்கள்

மார்ச் 20, 2019 11:15

புதுடில்லி: இளைஞர்கள் அதிகம் உலாவும் சமூகவலை தளங்களை தனக்கு சாதகமாக பிரதமர் மோடி எப்படி சிறப்பாக பயன்படுத்துகிறார் என் தகவல் வெளியாகி உள்ளது. 
மோடிக்காக சமூகவலை தளங்களில் பணியாற்ற 350 தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். இவர்கள் டில்லியிலும் குஜராத்திலும் பணியாற்றுகின்றனர். டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றில் அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவது தான் இவர்கள் பணி. அதுவும், உடனுக்குடன் பதிவுகளை தயார் செய்து சமூகவலை தளங்களில் பதிவேற்றுவதில் இவர்கள் கில்லாடிகள். 

வீடியோ அணி 


மோடி மீது அன்பும் அபிமானமும் கொண்டு இவர்களில் 6 பேர் 30 விநாடி ஓடக்கூடிய வீடியோ தயாரிப்பில் நிபுணர்கள். வீடியோ தயாரிப்பு, எடிட்டிங், சவுண்ட், கிராபிக்ஸ் போன்றவற்றில் இவர்கள் புகுந்து விளையாடுவார்கள். ஒரு மணி நேரத்தில் ஒரு வீடியோவை தயாரித்து, தேவை ஏற்பட்டால் மொழி பெயர்த்து பதிவேற்றிவிடுவர்.இவர்களுடன் அடிக்கடி போனில் மோடி பேசுவார். ஏழைகளுக்காக அதிக பதிவுகள் வெளியாக வேண்டும் என மோடி விரும்புகிறார். ‛நான் ஒரு டீக்கடைக்காரன்‛‛, ‛‛சவுகிதார் (காவலன்)'' போன்ற வாசகங்கள் எல்லாம் அப்படி ஏற்பட்டது தான். வீடியோவுக்காக ஒரு நவீன 3டி தொழில்நுட்பத்தையும் ஜப்பானில் இருந்து வரவழைத்துள்ளார் மோடி. டில்லியில் மோடி பேசினால், அந்த வீடியோவை இன்டர்நெட் வழியாக அது 3டி தரத்தில் உடனுக்குடன் அனுப்ப முடியும். லேசர் தொழில்நுட்பத்திலும் மோடியை காண்பிக்க முடியும். 
 

தலைப்புச்செய்திகள்