Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கட்டாயம் சி.சி.டி.வி. கேமராக்கள் வேண்டும்:  திருநெல்வேலி டி.எஸ்.பி. பிரான்சிஸ் கறார்

செப்டம்பர் 25, 2020 11:39

திருநெல்வேலி: திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வியாபாரிகள், தங்களுடைய கடைகளில், கட்டாயம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்,''  என்று டி.எஸ்.பி. பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.யாக அண்மையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரான்சிஸ், அம்பாசமுத்திரம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன், கலந்தாய்வு நிகழ்ச்சியினை, நடத்தினார்.

அப்போது அவர்களிடம் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் பேசீியதாவது:
சட்டம் ஒழுங்கினை பாதுகாப்பதற்கு, வியாபாரிகள் அனைவரும், காவல்துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, எளிதில் விரைவாக கண்டுபிடித்திடும் வகையில், ஒவ்வொரு வியாபாரியும், தங்களுடைய கடைகளில், கட்டாயம் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். கடைகளுக்கு உள்ளே மட்டும் பொருத்தினால் போதாது. வெளியேயும் பொருத்த வேண்டும். அது தான், திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடித்திட உதவும்.

தற்பொழுது அம்பாசமுத்திரத்தில், ஏழு முக்கிய சந்திப்புகளில், சி.சி..டி.வி. கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரித்திட காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கு வியாபாரிகள் உதவிட வேண்டும். தங்களுக்குரிய பிரச்சனைகளை காவல்துறையினரிடம், தயக்கமின்றி எடுத்துரைக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் நகர வியாபாரிகள் சங்க தலைவர் காந்தி, செயலாளர் கார்த்திகேயன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜோயல், வாசுதேவராஜா, வேம்பு, ஹரிகரன், பத்மபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்