Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்-முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 

செப்டம்பர் 26, 2020 05:48

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்,''  என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா  பாதிப்பு காரணமாக பல நாட்கள் சிகிச்சையில் இருந்த போதும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனிக்காததால் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மறைந்த எஸ்.பி.பி.யின் உடல்,இன்று காலை 11 மணிக்கு சென்னை அடுத்த செங்குன்றத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமரைப்பாக்கம் பண்ணை இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எஸ்.பி.பி. இறுதி ஊர்வலத்தை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதே கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் விடுத்திருந்தனர். இதனையடுத்து, காவல் துறை மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்காத இடம்பெற்றிருப்பவர் எஸ்.பி.பி.. அவருடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படு,ம்" என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
அதன்படி பிரபல பாடகர் எஸ்.பி.பி. உடல் அரசின் முயழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்