Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

6 மாதத்தில் 3 லட்சம் முகக்கவசம் தயாரித்த கைதிகள் 

செப்டம்பர் 26, 2020 05:53

கோவை: கோவை மத்திய சிறையில் கடந்த 6 மாதத்தில் 3 லட்சம் முகக்கவசங்களை கைதிகள் தயாரித்துள்ளனர்,''  என்று சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
கொள்ளை கொரோனா நோயான வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், சரீர விலகல், கைகளை சோப்பு அல்லது சானிடைசர்கள் போட்டு கழுவுவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்டவைகளே தீர்வாக உள்ளன.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் வெளியில் செல்லும் போதும், உரையாடலின் போதும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். வீட்டில் பாதிக்கப்படக்கூடிய நபர் இருப்பின், அவருடன் உரையாடும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும். உலகளாவிய முகக்கவசம் அணியும் முறையால் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டும் வருகிறது.

இதனிடையே, இதனிடையே கோவை மத்திய சிறை வளாகத்தில்முகக்கவசம் தயாரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த 6 மாதத்தில் 3 லட்சம் முகக்கவசங்களை கைதிகள் தயாரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,  “கடந்த 6 மாதங்களாக 10க்கும் மேற்பட்ட கைதிகள் மூலமாக 3 லட்சம் தயாரிக்கப்பட்டுள்ளன.. இந்த முகக்கவசங்கள் ஆரம்பத்தில் போலீசாருக்கு மட்டும் வழங்கப்பட்டன. பின்னர், பல்வேறு துறைகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. துவக்கத்தில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட முகக்கவசம், தற்போது ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகின்றன,” என்று தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்