Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் தள்ளிவைப்புக்கான சாத்தியக்கூறு இல்லை: அமைச்சர் பாண்டியராஜன் கறார்

செப்டம்பர் 27, 2020 07:01

ஆவடி: தமிழகத்தில் தேர்தல் தள்ளிவைப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை,'' என்று அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் கறாராக உறுதிபட தெரிவித்தார்.
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு பகுதியில் மருத்துவ முகாம் தொடங்கிவைத்த பாண்டியராஜன் மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் அரசு நிலங்கள் சம்பந்தமான பகுதிகளை பார்வையிட்டார் அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:

பீகார் மாநிலத்தில் எந்த நாளில் தேர்தல் நடக்க வேண்டுமோ அந்த நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே 23ம் தேதிக்குள் தமிழகத்தில் தேர்தல் நடக்கும்.  நம்மைவிட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலத்தில் தேர்தல் நடத்துகிறார்கள். இன்னும் 8 மாதத்திற்குள் கொரோனா இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். பாரத பிரதமரே நமது முதல்வரை பாராட்டி உள்ளார்.
தேர்தல் தள்ளிவைப்பு அதற்கான எந்த சாத்தியக்கூறுகள் இல்லை என நான் நினைக்கிறேன். அடுத்த ஆண்டு மே மாதம் கண்டிப்பாக தேர்தல் நடக்கும். மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது என்ற செய்தி தெரியும். மேலும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து கேட்டபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதவுக்கான பலரும் பாட தயங்கிய காலத்தில் அவருக்காக பாடியவர் பாலசுப்ரமணியம்.

இப்போதும் அ.தி.மு.க. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த பாடல் முதலில் ஒலிக்கும். 4 தலைமுறைகளுக்கான பாடல்களை பாடி உள்ளார். அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் விதைக்கப்பட்டு இருப்பது திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள எங்களுக்கு பெருமை தரக்கூடிய விசயமாக கருதுகிறோம்.
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

 

தலைப்புச்செய்திகள்