Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.20 கோடி அரசு நிலம் அதிரடியாக மீட்பு

செப்டம்பர் 27, 2020 07:07

திருவள்ளூர்:பூந்தமல்லி அருகே தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்த ரூ.20 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கோபுரச நல்லூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் குளம் புறம்போக்கு நிலம் உள்ளது இந்த நிலத்தில் சிலர் இரவு நேரங்களில் குப்பைகள் மற்றும் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்து அதனை சிறுக, சிறுக மூடி வருவதாக  தகவல் வந்தது.

இதையடுத்து பூந்தமல்லி தாசில்தார் குமார் தலைமையில் பூந்தமல்லி வருவாய் ஆய்வாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் விரைந்து வந்து அங்கிருந்த தடுப்புகள் அனைத்தும் அகற்றிவிட்டு அரசுக்கு சொந்தமான நிலம் என அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைத்தனர்.

மேலும் மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதியில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்