Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆயுதப்படை காவலர் கொலை- போலீசார் விசாரணை

செப்டம்பர் 28, 2020 10:18

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரம் பகுதிகளில் வசித்து வரும் இன்பரசு (28) புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வீடு திரும்பிய நிலையில், இன்று பணிக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுதப்படை காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்