Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

11 மாவட்டங்களில் கொரோனா கடுமையாக உயர்ந்து வருகிறது

செப்டம்பர் 29, 2020 10:06

சென்னை: தமிழகத்தில் 20 மாவட்டங்களில்  கொரோனா பாதிப்பு 100க்கும் கீழாகவே உள்ளது. அதேநேரம் சென்னை, செங்கல்பட்டு கோவை, கடலூர், சேலம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு திருப்பூர், காஞ்சிபுரம் , தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் நேற்றுமுன்தினம் 46,341 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதைவிட குறைவாக 46,306 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5,554 பேர் மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் செப்டம்பர் 28ம் தேதி மாலை நிலவரப்படி எந்த மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகம், எந்த மாவட்டத்தில் நோயாளிகள், எங்கு இன்றைக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது என்ற விவரங்கள் வெளியாகிக்ஷயுள்ளது.

தமிழகத்தில் நோயாளிகள் அதிகபட்சமாக சென்னையில் 11,043 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 5,117 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தில் 2,768 பேரும், செங்கல்பட்டில் 2,189 பேரும், திருப்பூரில் 1,633 பேரும், திருவள்ளூரில் 1,589 பேரும், கடலூரில் 1,492 பேரும், ஈரோட்டில் 1,120 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் 1,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 587 பேரும், சேலத்தில் 256 பேரும், செங்கல்பட்டில் 249 பேரும், திருவள்ளூரில் 249 பேரும், திருப்பூரில் 198 பேரும், கடலூரில் 162 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலையில் 151 பேரும், வேலூரில் 135 பேரும், திருவாரூரில் 128 பேரும், திருச்சியில் 96 பேரும், திருநெல்வேலியில் 63 பேரும், விழுப்புரத்தில் 131 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 146 பேரும், தஞ்சாவூரில் 180 பேரும், புதுக்கோட்டையில் 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் 58 பேரும், காஞ்சிபுரத்தில் 147 பேரும், கன்னியாகுமரியில் 98 பேரும் ராணிப்பேட்டையில் 52 பேரும், தேனியில் 74 பேரும், நீலகிரியில் 137 பேரும், திருப்பத்தூரில் 69 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 38 பேரும், அரியலூரில் 36 பேரும், தென்காசியில் 53 பேரும், நாகப்பட்டினத்தில் 61 பேரும், மதுரையில் 86 பேரும், கரூரில் 51 பேரும், கிருஷ்ணகிரியில் 94 பேரும், பெரம்பலூரில் 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்..
இவ்வாறு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தலைப்புச்செய்திகள்