Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர் 2 வயது பெண் குழந்தை சாதனை

செப்டம்பர் 29, 2020 10:39

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை சிவன்யா 12 வண்ண கலர்களில் பெயர்களை எப்படி மாற்றி கேட்டாலும் சரியாக சொல்லி உலக சாதனை செய்து அசத்தியதால் அவருக்கு நோபல் உலக சாதனை நிறுவனம் சாதனை சான்றிதழ் பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.. திருப்பூர் அருகே நெருப் பெரிச்சல் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன், கிருத்திகா தம்பதியினரின் மகள் 2 வயது பெண் குழந்தை சிவன்யா.

இந்த குழந்தை சிவன்யாவிடம் பல வண்ண கலர்களின் படங்களை காண்பித்து அவற்றின் நிறம் என்ன என கேட்டாள் மழலை மொழியில் மிகச்சரியாக பச்சை, நீலம், சிவப்பு  உள்ளிட்ட 12 கலர்களை எப்படி மாற்றி கேட்டாலும் தெளிவாக சரியான கலர்களின் பெயர்களை  வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

இந்த சிவன்யாவின் உலக சாதனை பாராட்டி உலக சாதனை படைததற்காக  நோபள் உலக சாதனை புத்தகம் நிறுவனம் சார்பில் குழந்தை சுவன்யாவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்து  சான்றிதழ்,  கேடயம் வழங்கப்பட்டது.  இந்த பெண் குழந்தை மழலை மொழியில் ஆங்கிலத்தில் 12 கலர்களின் பெயர்களை கூறி அசத்துகிறாள் சாதனை குழந்தை சிவன்யா.

தனது அதீத ஞபக சக்தியுடன் விளங்கும் குழந்தை சிவன்யாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. மழலைப் பள்ளிக்கு செல்லும் முன்னே 12 வண்ண கலர்களில் பெயர்களை  கூறி அசத்தும் பெண்குழந்தை சிவன்யா உலக சாதனையை நிகழ்த்தியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

பெண் குழந்தை சுகன்யாவின் உலக சாதனை நிகழ்வினை அடுத்து நோபல் உலக சாதனை அமைப்பின் சி.இ.ஓ. அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதற்கு முந்தைய சாதனையாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் உலக நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரத்தின் பெயரையும் கூறி சாதனை நிகழ்த்தி உள்ளான், அதை முறியடிக்கும் வகையில் தற்போது 2 வயது பெண் குழந்தை சிவன்யா  12  வண்ணங்களின் பெயர்களை தெரிவித்து சாதனை செய்திருப்பது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்று தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்