Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துணை முதல்வர் பதவி ஓ.பி.எஸ். ராஜினாமா? காரில் தேசிய கொடி அகற்றத்தால் பரபரப்பு

செப்டம்பர் 30, 2020 11:16

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது காரில் இருந்து தேசிய கொடியை அகற்றிவிட்டதாலும் சொந்த காரையே பயன்படுத்துவதாலும் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறாரா? என்கிற பரபரப்பு எழுந்துள்ளது.அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் நானே என அடம்பிடித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அ.தி.மு.க.வில் பெரும்பான்மையோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் இது தொடர்பாக காரசார மோதல்கள் நடைபெற்றன. ஓ.பி.எஸ்.க்கு தாம் நினைத்தது போன்ற ஆதரவு கிடைக்காததால் கடும் அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும் இருந்து வருகிறார். அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளரை ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தமது ஆதரவாளர்கள் சிலருடன் ஓ.பி.எஸ் நேற்று வீட்டில் ஆலோசனை நடத்தினார். முதல்வருடனான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஓ.பி.எஸ். புறக்கணித்தும்விட்டார். இன்னொரு பக்கம் மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தீவிர ஆலோசனையும் நடத்தி வந்தனர். இந்த ஆலோசனைகள் இரவிலும் நீடித்தது.ராஜினாமா செய்கிறாரோ? இந்நிலையில்தான் ஓ.பி.எஸ். தமது காரில் இருந்து தேசிய கொடியை கழற்றிவிட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அரசு காரை பயன்படுத்தாமல் சொந்த காரையே ஓ.பி.எஸ். பயன்படுத்தும் முடிவில் இருக்கிறாராம். இதனால் துணை முதல்வர் பதவியை ஓ.பி.எஸ். எந்த நேரத்திலும் ராஜினாமா செய்வாரோ? என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓ.பி.எஸ். தீவிர ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் அவரை சந்தித்து அடுத்தக்கட்ட முயற்சி குறித்து ஆலோசனை செய்துள்ளார்.  நேற்று நடந்த சென்னை மாநகராட்சி நிரல் அழைப்பிதலில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் நீக்கப்பட்டது அ.தி.மு.க. சீனியர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழவிசாமி. மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனீிசாமி நடத்திய கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்