Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்றைய தினம் வரலாற்றில் சோகமான நாள் - அசாதுதீன் ஒவைசி

செப்டம்பர் 30, 2020 12:13

புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி, உமா பாரதி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் வழக்கில் இருந்து விடுவித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்து உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள், சாட்சியங்கள் திடமாக இல்லை; பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட ஒன்றல்ல, திடீரென நடைபெற்றது எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அசாதுதீன் ஒவைசி கூறுகையில், இன்றைய தினம் வரலாற்றில் சோகமான நாள். சதிச் செயல் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. இதற்கு எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள் தயாரிப்பு தேவைப்படும் என விளக்குங்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தது என தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்