Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.கவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர பா.ஜ.க. முயற்சி: முடிந்து போன 2ஜி வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறது

அக்டோபர் 01, 2020 05:40

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எப்படியாவது குறைந்தது 25 இடங்களில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் பா.ஜ.க. நுழைய காய்நகர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே முடிந்து போன 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை கையில் எடுத்து விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் மோசடி நடந்தததாக அப்போதைய மத்திய அமைச்சர் ராஜாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து 2011 பிப்ரவரியில் டெல்லி திஹார் சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்து பணி பரிமாற்ற மோசடி வழக்கில் 2011 மே 21ம் தேதி கருணாநிதி மகள் எம்.பி. கனிமொழி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அதே திஹார் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்குகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, எம்.பி.கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன தலைவர் ஷாகித் பல்வா உள்ளிட்ட 19பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.  
இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வந்தது. மத்திய அமைச்சர் ராஜா தனக்காக வக்கீல் வைக்காமல் தானே வாதாடினார். நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு சளைக்காமல் பதில் தெரிவித்ததால் சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வக்கீல்களே அசந்து போயினர்.

கனிமொழிக்கு மட்டும் புகழ்பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி ஆஜராகி அவர் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார். முடிவில் கடந்த 2017 டிசம்பர் 21ம் தேதி 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் மோசடி நடந்தை சி.பி.ஐ. தரப்பும் அமலாக்கத்துறையும் சரிவர நிருபிக்காததால் ராஜா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதுஒருபுறம் இருக்க சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தனித்தனியாக 2018 மார்ச்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது பதில்மனுதாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறு ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்ட அனைவருக்கும் 2018 மார்ச் 21ம் தேதி டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்குமாறு சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதி பிரிஜேஸ் சேத்தி காணொலி காட்சி மூ லம் விசாரணை நடத்தினார்.

முடிவில் அக்டோபர் 5ம் தேதி முதல் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாள்தோறும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி வருகிற நவம்பர் மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல்தான் அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தை விசாரித்து வந்த நீதிபதி பணி ஓய்வு பெறும் முன் அயோத்தி ராமர்கோவில் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே ம சூ தி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
எப்படியாவது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த ராஜாவுக்கும், கனிமொழி உள்ளிட்டோருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் 

இதை வைத்து வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்து கூ ட்டணி அமைத்து சட்டசபையில் கால்பதிக்க பா.ஜ.க. டெல்லி வட்டாரங்கள் தயாராகிவிட்டது.
இதுகுறித்து தி.மு.க. தலைமை நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமே தீர்ப்பளித்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வழக்கை பா.ஜ.க. கையில் எடுத்திருப்பது எதிர்கட்சிகளை மிரட்டத்தான். எது எப்படி இருந்தாலும் தி.மு.க., இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளும். ஒருவேளை எங்களுக்கு எதிராக தீர்ப்பு வருமானால் பா.ஜ.க.வுக்கு தான் நஷ்டமே தவிர. எங்களுக்கில்லை. இது தேர்தல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்'  விரைவில் தமிழக அரசியலில் மாற்றங்கள் வரும். வரும் சட்டமன்ற தேர்தலில் 60 இடங்களில் தனித்து நின்று போட்டியிடுவோம்,'' என்று தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்