Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு பிரதமர் மோடி  பிறந்தநாள் வாழ்த்து

அக்டோபர் 01, 2020 06:26

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில், “ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மிகுந்த நுண்ணறிவும், கொள்கை விஷயங்களைப் பற்றிய புத்திசாலித்தனமான புரிதலும் நம் தேசத்திற்கு பெரும் சொத்து. பாதிக்கப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகவும் இரக்கமுள்ளவர். அவரது நல்ல ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்