Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீடுகளில் தூய்மை மற்றும் சுகாதாரங்கள் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்

அக்டோபர் 04, 2020 05:27

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஒன்றியப் பகுதிகள் முழுவதிலும், வீடுகளில் தூய்மை மற்றும் சுகாதாரங்கள் குறித்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டும் சிறப்பு முகாமை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ்,  மொத்தம் உள்ள 17 ஊராட்சிகளில், தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, துண்டுப்பிரசுரங்கள் (ஸ்டிக்கர்) ஒட்டும் சிறப்பு முகாம் தொடங்கியது.

வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாவதி, கோவிலம்மாள்புரம் ஊராட்சியில், ஒரு வீட்டில் துண்டுப்பிரசுரத்தை ஒட்டி வைத்து, இந்த முகாமினைத் துவக்கி வைத்தார். நாங்குநேரி் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும், இப்பணிகள் இந்த வார இறுதிக்குள், முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என, அதன் செயலர் ஏர்வாடி சபேசன் தெரிவித்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் இணைந்து, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தயாரித்துள்ள, இந்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தில், காந்தியடிகளின் திருவுருவப்படம், தூய்மை இந்தியா சின்னம், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் முத்திரைகளுடன்,  "எனது கிராமம் தூய்மையின் இருப்பிடம்,  சுகாதாரத்தின் சிகரம், ஆரோக்கியத்தின் அடையாளம்" என்னும் வாக்கியங்களும்,  இடம் பெற்றுள்ளன.

வீடு வீடாகச்சென்று, துண்டுப்பிரசுரங்களை ஒட்டும் பணிகளில், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுடன், ஊராட்சி பணியாளர்களும், தூய்மை காவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்