Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிக மதிப்பெண் பெற்ற தூய்மை பணியாளர் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

அக்டோபர் 04, 2020 05:30

திருப்பூர்: காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சியின் அலுவலர்கள்  அடிப்படை பணியாளர்கள் சங்கம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சியின் அடிப்படை பணியாளர்கள் சங்கம்,  அம்பேத்கர் எஸ்.சி. எஸ்.டி. அலுவலர்கள் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற தூய்மை பணியாளர்களின் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா திருப்பூரில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாநகராட்சி பணியாளர் சங்க செயலாளர் கருப்புசாமி வரவேற்றார். மாநகராட்சி ஓட்டுனர் நல சங்க தலைவர் திருமலையேசு, ரத்தினம், லோகு, சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பணியாற்றும் இளம் நிலை உதவியாளர்களின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என்றுள்ள நிலையில்,  மாநகராட்சியில் பணியாற்றி வருகின்ற இளம்நிலை உதவியாளர்களின்  பணிக்கு பனிரெண்டாம் வகுப்பு என்று இருந்து வந்த நிலையில்,  தமிழக முதல்வர் மற்றும் மாநகராட்சியின் நிர்வாக இயக்குனரின் முயற்சியால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் என்ற உத்தரவைப் பிறப்பித்ததற்க்கு கூட்டத்தில் நன்றி செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். மாநகராட்சி பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு பணியிடம் ஒப்படைப்பு செய்ததை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்து மீண்டும் நகராட்சி நிர்வாகமே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களின் மாணவ-மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், பாரத பிரதமர் திட்ட குழு உறுப்பினர் செல்வகுமார், அரிமா சங்க தலைவர் மோகன் குமார் பரிசுகளை வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாசிலாமணி, அடிப்படை பணியாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், மாநகராட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்