Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு உ.பி. முதல்வர் உத்தரவு

அக்டோபர் 04, 2020 06:46

 

லக்னோ: ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமையால் பெண் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் உத்த்ரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உயர் ஜாதியைச் சேர்ந்த 4 பேர் கும்பலால் 20 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இடுப்பை 
உடைத்து, நாக்கை வெட்டி அந்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக உத்தரப்பிரதேசத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது பெற்றோருக்கு தெரியாமலேயே போலீசார் எரித்து விட்டதாக கடும் சர்ச்சை ஏற்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சென்ற போது, அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

அப்போது ராகுலை போலீசார் நடத்திய விதம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனிடையே பல்வேறு தடைகளை தாண்டி ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமையால் பெண் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்