Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் உணவுத்துறை அமைச்சர் வாக்குறுதி

அக்டோபர் 04, 2020 10:56

மன்னார்குடி: ''நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யபடும்,'' என மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் காமராஜ் கூறியதாவது:
அனைத்து விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருகிறார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 600லிருந்து 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யபடுகிறது. கொள்முதல் செய்த 24 மணி நேரத்தில் விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதால் விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பருவாண்டில் செப்டம்பர் 30ம் தேதி முடிவில் 32 லட்சத்து 40 ஆயிரத்து 990 மெட்ரிக் டன் என்கிற அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளார்கள். ரூ.6,120 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த காரிப் முறை அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் மத்தி அரசாங்கம் புதிய விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு வழங்கும். இந்தாண்டு குவிண்டாலுக்கு ரூ.53 கூடுதலாக வழங்கப்படுகிறது.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று ஞாயிற்று கிழமை விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யபடும். நெல் எந்த பகுதியில் அதிகமாக விளைகிறதோ அந்த பகுதிகளில் இரண்டு நேரடி நெல்கொமுதல் நிலையம் தருவதற்கு அரசு தயாராக உள்ளது. இரண்டு நாட்களில் அனைத்து கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யபட்ட நெல்மூட்டைகள் வெளியேற்றபடும்.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

தஞ்சை, திருவாருர், நாகை மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் குறைந்தளவே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நெல் மூட்டைகள் மழையிலும், வெயிலிலும் வீணாவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்