Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவளம், பனையூர் விடுதியில் விபச்சாரம்: 8 வெளிமாநில பெண்கள் மீட்பு

அக்டோபர் 05, 2020 07:12

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் மற்றும் கோவளத்தில் வெளிமாநில பெண்களை வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் விடுதி மேலாளர் உட்பட 7 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்து 8 பெண்களை மீட்டனர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள சொகுசு விடுதி   ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக   கானத்தூர் காவல் ஆய்வாளர் வேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அவர் தலைமையில் பெண்கள் அடங்கிய காவல் குழுவினர் பனையூரில் செயல்பட்டு வரும் (OYO) YOUR dreams Family Resort ல் சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 பெண்களை      வைத்து பாலியல் தொழில் நடத்தி    வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிப்பட்ட பெண்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் தெரிவித்ததாவது: மகாராஸ்டிரா, மேற்குவங்காளம் போன்ற  வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள்   என்பதும் மேலும் சில பெண்களை   கோவளத்தில் எஸ்.எம்.பேலஸ்  என்ற   பெயரில் உள்ள தங்கும் விடுதியில்    தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த    விடுதியின் உரிமையாளரான செந்தில்  குமார் வயது 40 என்பவர் தங்களுக்கு  வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து வந்தார்.

எங்களுடைய சூழ்நிலையை சாதகமாக்கி கொண்டு  தங்களை கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடவைத்தார்.  மகேந்திரன் வயது 38 மற்றும் சிவக்குமார் வயது 49 என்ற இடைதரகர் மூலம் பெண்களின் போட்டோக்களை ஆன்லைன் மூலம் அனுப்பி கட்டண தொகையாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை நிர்ணயித்து விருப்பமுள்ள நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக பணம் செலுத்திய  பின்னர் பனையூரில் உள்ள சொகுசு  விடுதியான OYO YOUR dreams Family Resort க்கு  சொகுசு கார்கள் மூலம் அழைத்து வந்து  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து தனிப்படை போலீஸார் பனையூர் OYO YOUR dreams Family Resort ன் மேலாளர் பாபு, இடைதரகர் சதீஸ் மற்றும் கார் ஓட்டுநர் திலீப் ஆகியோரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக கோவளம்  விடுதியில் இருந்த 5 பெண்களையும்  மீட்டனர். மேலும் அங்கிருந்த   இடைதரகர்களான மகேந்திரன்,   சிவக்குமார், சரவணன் ஆகியோரையும்  விடுதி  உரிமையாளரான செந்தில் குமார்  என்பவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து பாலியல்    தொழிலுக்கு பயன்படுத்திய சொகுசு  கார்கள் மற்றும் செல்போன்களை  போலீஸார் கைப்பற்றினர். சட்டத்திற்கு விரோதமான வகையில் வேலை     கேட்டு வரும் பெண்களை    கட்டாயபடுத்தி ஆன்லைன் மூலம்   பாலியல் தொழில் நடத்தி வந்த   கும்பலை கைது செய்த கானத்தூர் ஆய்வாளர் வேலு உள்ளிட்ட போலீசாரை  காவல் ஆணையாளர் வெகுவாக  பாராட்டினார்.

தலைப்புச்செய்திகள்