Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

'அரசியல் எதுக்கு? இமயமலைக்கு போகலாம்' ரஜினிகாந்துக்கு சீமான் நச் அட்வைஸ்

அக்டோபர் 05, 2020 10:18

சென்னை: ''வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதிலிருந்து அவர் மீதான முரண் நீங்கியது. அதே நிலையில் இவருக்கு அரசியல் எதற்கு? இமயமலைக்கு போகலாமே,'  என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகளை நாம் தமிழர் கட்சியினர் நடவு செய்துவருகிறார்கள். 

கடந்த ஆண்டும் இதே போல பல லட்சம் பனைவிதைகளை நடவு செய்த நாம் தமிழர் கட்சி, இந்த ஆண்டும் தொடர்ச்சியாக இந்த விழாவை முன்னெடுத்து செய்து வருகிறது.
இந்த நிலையில் அம்பத்தூர் தொகுதி, சதாக்குளம் பகுதியில் நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினியால் நாங்கள் சந்திப்பதை போன்ற அவச்சொற்களை சந்திக்க முடியாது. வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதிலிருந்து அவர் மீதான முரண் நீங்கியது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது சீமான் அவரை கடுமையாக எதிர்த்தார். அது ஏன் என கேட்டபோது ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் ஒரு பச்சை தமிழன் மட்டுமே எங்களை ஆள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்தோ தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என ஒரு ரசிகர்கள் முன் தெரிவித்திருந்தார். எனினும் அதை சீமான் உள்ளிட்டோர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் அண்மையில் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில் நான் கட்சி ஆரம்பித்தால் கட்சி என்னிடமும், ஆட்சி வேறு ஒருவரிடமும் இருக்கும். நான் கைகாட்டும் நபரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றார். இதை தொண்டர்கள் ஏற்க மாட்டோம் என கூறிய நிலையில் ரஜினியும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. 
இந்நிலையில் இவருக்கு அரசியல் எதற்கு? இமயமலைக்கு போகலாமே என்று நடிகர் ரஜினிகாந்துக்கு சீமான் அறிவுரை வழங்கியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்