Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் கொலை, கொள்ளை அதிகரிப்பு: மக்கள் விழிப்புணர்வு மையம் குற்றச்சாட்டு

அக்டோபர் 06, 2020 06:19

புதுச்சேரி: ''புதுவையில் கொலை, கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,''  என்று மக்கள் விழிப்புணர்வு மையம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு மையம் புதுச்சேரி தலைவர் தெரிவித்ததாவது:
அமைதிப் பூங்காவான புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொலை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு முன் முன்னாள் கவுன்சிலர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியை ரசிகர் மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. சாதாரண பொதுமக்களுக்கு என்ன நடக்குமோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

எனவே, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரும் சட்டம் ஒழுங்கைப் பேணி காப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சமூக விரோதிகள், ரவுடிகள், அடியாட்கள் குண்டர்களின் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட வேண்டும். புதுவை அமைதி பூங்காவாக திகழ வேண்டும். பொது மக்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும். புதுவை முழுவதும் காவல்துறையின் சீரிய செயல்பாடுகள் மூடுக்கி விடப்பட வேண்டும். காவல்துறையின் கைகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு மக்கள் விழிப்புணர்வு மையம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
 

தலைப்புச்செய்திகள்