Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேனியில் விஷ்வ இந்து பரிஷத் கூட்டம்

அக்டோபர் 06, 2020 06:22

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனுாரில் தேனி மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் சார்பாக விஸ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் விஷ்ணுபிரியயன் தலைமையில் அமைப்பை விரிவுபடுத்த வேண்டிய பணிகள் பற்றிய கூட்டம் நடந்தது.

இதில் விஸ்வ இந்து பரிஷத் இணைச் செயலாளர் மேகலா முன்னிலையில் இந்த ஆண்டின் திட்டங்கள் குறித்தும் இனி வரும் காலங்களில் நமது அமைப்பை விரிவுபடுத்துவது பற்றியும், இளைஞர் அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பு சீரிய முறையில் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் போடி நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், ரவிக்குமார், செந்தில், ராஜா, பிரகலாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்