Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்: அமைச்சர் பாண்டியராஜன்

அக்டோபர் 06, 2020 06:33

ஆவடி: ''எந்த நேரத்தில் எது நடக்கவேண்டுமோ அது நடக்கும்,'' என்று  ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். ஆவடி தொகுதிக்குட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொடர்ந்து நடைபெறவுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து நடைபெறாமல் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியில் உள்ள தாமரை குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதை அமைக்கும் வேலைகளை ஆய்வு மேற்கொண்டு பணிகள் நிறைவு செய்ய அறிவுறுத்தினார். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து 30 சதவீதமாக உள்ளது உண்மைதான். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பது மக்களின் நலனுக்காகதான்.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது இல்லை. பரவல் ஏற்படாமல் இருக்க முயற்சி எடுத்து வருகின்றனர். முதல்வரை அமைச்சர்கள் சந்திப்பது இயல்புதான். தினமும் சந்தித்து வருகின்றனர். நான் தொகுதியில் இருந்ததால் அமைச்சர்கள் சந்திப்பு பற்றி தெரியவில்லை. எந்த நேரத்தில் எது நடக்கவேணுமோ அது நடக்கும். எங்கள் துணை முதல்வர் அறிவித்தது போன்று முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்