Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நான்தான் மனோபாலா இல்லை: ரவிவர்மா அறிவிப்பு 

அக்டோபர் 06, 2020 08:21

சென்னை: ''சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக நடிகர் மனோபாலா தேர்வானது செல்லாது,''  என ரவிவர்மா தெரிவித்துள்ளார்.சின்னத்திரை நடிகர் சங்கத்தில், 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதன் தலைவராக இருப்பவர், ரவிவர்மா. துணைத் தலைவராக மனோபாலா இருக்கிறார். ரவி வர்மாவுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது அதிருப்தியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி அவரை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டு புதிய தலைவராக மனோபாலாவை தேர்வு செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இதைக் கண்டித்து ரவிவர்மாவும் அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சின்னத்திரை நடிகர் சங்கம் நேர்மையாக செயல்பட்டு வருகிறது. எந்த முறைகேடும் நடக்கவில்லை. சங்கத்தின் தலைவர் ரவிவர்மா மீது மனோபாலா, ரிஷி ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர்.

ரவிவர்மாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அவர்கள் கையெழுத்து வாங்கிய சில உறுப்பினர்கள், சங்கத்தில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள். ரவிவர்மாவை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பேரவைக்குத்தான் இருக்கிறது. கொரோனா நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்பட்டன. சங்கத்தின் விதிகளின்படி ரவிவர்மா சங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து செயல்படுவார். சங்க விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்.

பொதுச்செயலாளர் ரிஷி கேசவன் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் சங்க விதிகளுக்கு எதிரானவை. அவை செல்லாது. மனோபாலாவை தலைவராக தேர்வு செய்ததது தவறு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தலைப்புச்செய்திகள்