Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்

அக்டோபர் 06, 2020 09:01

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க. பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. திருச்சி லால்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அ.தி.மு.க. திருச்சி தெற்கு புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட லால்குடி வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

லால்குடி அருகே உள்ள திருமணமேடு கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளருமான குமார் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பர்வீன் கனி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன், முன்னாள் அவைத் தலைவர் தர்மதுரை, மாவட்ட இணை செயலாளர் ரீனா செந்தில், லால்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புறநகர் மாவட்ட செயலாளர் அருண் நேரு, ஒன்றிய கவுன்சிலர் குணசீலன், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி பெரியசாமி மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பத்தாளப்பேட்டை பகுதியில் அ.தி.மு.க. கொடியை மாவட்ட செயலாளர் குமார் ஏற்றிவைத்தார்.
 

தலைப்புச்செய்திகள்