Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாபர் மசூதி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 06, 2020 09:40

திருநெல்வேலி: பாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,   குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலையை, மறுபரிசீலனை செய்யக்கோரியும், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்மையில், லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட, பாபர் மசூதி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட, 32 பேரின் தீர்ப்பை, மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினர், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் இஸ்மாயில் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி செயலாளர் நயினார், இளைஞர் அணி செயலாளர் காஜா இஸ்மாயில், சேரன்மகாதேவி ஒன்றியச் செயலாளர் பத்தமடை காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், தென்காசி மாவட்ட செயலாளர் அன்சார் ஆகியோர், கண்டன உரை நிகழ்த்தினர். 

ஆர்ப்பாட்டத்தில்,  இணையதளப் பொறுப்பாளர் பைரோஸ், நகர தலைவர்கள் மேலப்பாளையம் சுலைமான், வீரவநல்லூர்  ஜின்னா, அம்பாசமுத்திரம் நியாஸ், ஒன்றிய செயலாளர்கள் ஆலங்குளம் சலீம், கடையம் இப்ராகீம், வடகரை காதர், பத்தமடை யாசின் உட்பட நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர். மத்திய அரசினையும், அதற்கு துணை போகும் மாநில அரசினையும் கண்டித்து, 'கோஷம்'  எழுப்பினர்.

தலைப்புச்செய்திகள்