Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக சட்டமன்றம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்களின் 2ம் பட்டியல் வெளியீடு

மார்ச் 22, 2019 05:37

சென்னை: தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நீண்ட நாள் களப்பணி ஆற்றியவர்களாவர். இதன் காரணமாக கழக முன்னணியினரும் தொண்டர்களும் தொகுதி மக்‍களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திரு. T.G. மணி, வேலூர் கிழக்‍கு மாவட்ட நெமிலி ஒன்றியக்‍ கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர், 2001ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மேலப்புலம் ஒன்றியக்‍ குழு உறுப்பினராகவும், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை வேலூர் மாவட்ட திட்டக்‍குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.  

பாப்பிரெட்டிப்பட்டியில் களமிறங்கும் திரு. D.K. ராஜேந்திரன், தருமபுரி மாவட்டக்‍ கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார். மாவட்ட ஊராட்சிக்‍குழு உறுப்பினராகவும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் பெருந்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், தருமபுரி நகரக்‍ கழக இணைச் செயலாளர், கழகச் செயலாளர், ஒன்றியக்‍ கழகச் செயலாளர், இளைஞரணிச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளிலும் இவர் பணியாற்றியுள்ளார்.  

நிலக்‍கோட்டை தனித் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. R. தங்கதுரை, திண்டுக்‍கல் கிழக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார். முன்னாள் அரசு வழக்‍கறிஞராகவும் பணியாற்றிய இவர், நிலக்‍கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.  

திருவாரூர் தொகுதியில் களமிறங்கும் S. காமராஜ், திருவாரூர் மாவட்டக்‍ கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 2011-ல் ஒன்றியக்‍ குழு உறுப்பினராகவும், ஒன்றியக்‍ குழு பெருந்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.  

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் M. ரெங்கசாமி, கழகப் பொருளாளராகவும், தஞ்சை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். தஞ்சை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஒன்றியக்‍ குழு உறுப்பினராகவும், 2011ம் ஆண்டிலிருந்து தமிழ்ப் பல்கலைக்‍கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்‍கழக ஆட்சிமன்றக்‍ குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011-லிருந்து சட்டமன்ற பொது நிறுவனங்கள் உறுப்பினராகவும், 2015-ம் ஆண்டிலிருந்து மாமன்னன் ராஜ ராஜசோழன் சதய விழா குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.  

ஆண்டிப்பட்டி தொகுதியில் களமிறங்கும் R. ஜெயக்‍குமார், ஆண்டிப்பட்டி ஒன்றியக்‍ கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை குன்னூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும், 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை எம்.சுப்பலாபுரம் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.  

பெரியகுளம் தனித் தொகுதியில் போட்டியிடும் டாக்‍டர் கதிர்காமு கழக மருத்துவரணி தலைவராக பணியாற்றி வருகிறார். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தேனி அரசு மருத்துவக்‍ கல்லூரியில் டீனாகவும், அறுவை சிகிச்சைத் துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 15 ஆண்டுகள் தொடர்ந்து மருத்துவரணி துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.  

விளாத்திகுளம் தொகுதியில் களமிறங்கும் டாக்‍டர் K. ஜோதிமணி, தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராகப் பணியாற்றி வருகிறார். ஐஐடி சென்னையில் தனது ஆய்வுப் பட்டம் பெற்ற இவர், துணைப் பேராசிரியராக பணியைத் தொடங்கி, ONGC-ல் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார். விளாத்திகுளம் பகுதியில் நபார்டு எனப்படும் கிராம வளர்ச்சி வங்கித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மேதகு ஆளுநர் ரோசைய்யாவிடம் விருது பெற்றுள்ளார்.  

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் N. முருகசாமி, புதுச்சேரி மாநிலக்‍ கழக வர்த்தகரணிச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.  

நடைபெறவிருக்‍கும் நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் சிறந்த களப்பணியாற்றியவர்களை, கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்வு செய்து வேட்பாளராக அறிவித்திருப்பது கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்‍களும் இதை வரவேற்றுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்