Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் எஸ்.சி.க்கு 21% இடஒதுக்கீடு வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை

அக்டோபர் 06, 2020 11:49

சென்னை: ''தமிழகத்தில் எஸ்.சி. இடஒதுக்கீட்டை 21 சதவீதமாக உயர்த்த வேண்டும்,''  என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் புதிய, புதிய இடஒதுக்கீடு குரல்கள் எதிரொலித்து வருகின்றன. தங்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தேவேந்திரகுல வேளாளர்கள் கோரிக்கை வைத்து போராடுகின்றனர். 

இன்னொரு பக்கம் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் எஸ்.சி. இடஒதுக்கீட்டு அளவை 21 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் 2011ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள மக்கள்தொகை 7,21,47,030 எனக் கண்டறியப்பட்டது. அதில் எஸ்.சி. பிரிவினரின் மொத்த மக்கள்தொகை 1,44,38,445 ஆகும். அது மொத்த மக்கள் தொகையில் 20.01 சதவீதமாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த அம்மக்களின் எண்ணிக்கையையும் உள்ளடக்கினால் அது இப்போது குறைந்தது 21 சதவீதமாக இருக்கும். எனவே எஸ்.சி. வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை 21 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்