Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவடியில் மத்திய அதிரடிப்படையின் 28ம் ஆண்டு விழா

அக்டோபர் 07, 2020 05:10

ஆவடி: ஆவடியில் மத்திய விரைவு அதிரடிப் படை வீரர்கள் சார்பில் 28 ஆண்டு விழா நடைபெற்றது. இந்தியாவில் 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் மத்திய விரைவு அதிரடிப்படை. தற்போது இந்தியாவில் 15 விரைவு அதிரடிப்படை பிரிவுகள் உள்ளன. இந்த மத்திய விரைவு அதிரடிப்படை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இனவாத வன்முறைகளை தடுத்தல். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை நிலைநாட்டுதல். கலவரத்திற்குப் பிறகு மக்களிடம் மற்றும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுதல் உட்பட பல்வேறு செயல்களைச் செம்மையாகச் செய்து வருகிறது.

இந்த மத்திய விரைவு அதிரடிப் படையின் 28ம் ஆண்டு விழா சென்னை ஆவடி சி.ஆர்.பி.எஃப். மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்.ஏ.எஃப் வீரர்கள் பேண்டு வாத்தியங்கள் இசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய விரைவு அதிரடிப்படையின் துணை கமாண்டன்ட் அபிஷேக் சகாயா  கலந்து கொண்டார். இதை தொடர்ந்து மத்திய விரைவு அதிரடிப்படை வீரர்கள் பெட்ஜ் பார்மெஷன், பிளாட்டன் பார்மெஷன், எக்ஸ்டெண்ட் பார்மேஷன்,  எக்ஸ்லைன்ட் ஒன் டீப் பார்மேஷன், எக்ஸ்லைன்ட் 2 டீப் பார்மேஷன்,  பிளாட்டுன் சர்க்குலர் பார்மேஷன் என 6 பிரிவில் வீரர்கள் பயிற்சி செய்து காண்பித்தது பார்வையாளர்கள் மத்தியில் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்நிகழ்ச்சியில் மத்திய விரைவு அதிரடிப் படையின் இணை கமாண்டர்கள் அப்துல் அஜீஸ்,  பல்தேவ் சிங், நாராயணன் மற்றும் மனோஜ் பாண்டே, மகேஷ்குமார், பி.ஜி.யூ. அஜினகவுடா, முகமத் ராவ் உட்பட வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்