Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேவேந்திர வேளாளர் நலச்சங்கம் சார்பில் உண்ணாவிரதம்

அக்டோபர் 07, 2020 08:38

திருப்பூர்: அரசியல் வாக்குறுதி அளித்தபடி தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கக்கோரி தேவேந்திர வேளாளர் நலச் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம் குளத்துபுதுர் பகுதியில் உண்ணாவிரதம் நடந்தது. தங்கள் சமூக மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தில்  ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் பாண்டியர் தலைமையில் பாண்டியர் பேரியக்கத்தின் தலைவர் கருப்புசாமி முன்னிலையில் நடைபெற்றது. 

தேவேந்திரகுல வேளாளர் பட்டியலின பிரிவில் இடம்பெற்றுள்ள குடும்பர், காலாடி, பண்ணாடி, தேவேந்திர குலத்தார், கடையர், பள்ளர் என்ற ஆறு உட்பிரிவுகளையும் இணைத்து  தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கவும், அம்மக்களைப் பட்டியல் பிரிவிலிருந்து விலக்கிடவும் வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் உண்ணவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மேலும் ஊர் பண்ணாடி கருப்புசாமி, ரகுபதி, அரசகுமார், மனோகர், கருப்புசாமி, முருகசாமி, மெய்யான மூர்த்தி, தேவர் குல இளைஞரணி கோகிலன், மோகன், பூபதி, சந்தோஷ், சிவக்குமார், மதன்ராஜ், தனபால், பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்