Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பண்டிகை காலத்தில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம்: கவர்னர் 

அக்டோபர் 07, 2020 08:48

புதுச்சேரி: ''பண்டிகை காலத்தில் இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும்,''  என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிட மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் பண்டிகை காலங்களில் இலவச துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பண்டிகை காலம் வர உள்ளதால் அவர்களுக்கு இலவச துணிகள் வழங்குவது தொடர்பாக புதுவை அரசு சார்பில் கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுவை மாநிலத்தில் விழா காலங்களில் மக்களுக்கு இலவச துணி வழங்குவது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி கடந்த 9.6.2020 அன்று கடிதம் அனுப்பி இருந்தார்.
வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக தான் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த ஆண்டுகளை போல் பணம் இந்த ஆண்டும் வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை கவர்னர் கிரண்பேடி சமூகவலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கவனர்கள் கிரண்பேடி கூறுகையில், ‘வங்கி கணக்கில் பணம் தரப்படும் முறையை மீண்டும் மத்திய அரசு உறுதிபடுத்தி உள்ளது. இது அரசு விதி’ என்று குறிப்பிட்டார்.
 

தலைப்புச்செய்திகள்