Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு: திருச்சி, துறையூர், கரூரில் கொண்டாட்டம்

அக்டோபர் 07, 2020 11:30

திருச்சி: வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் வளர்மதி ஏற்பாட்டில் திருவானைக்கோவில் பகுதி செயலாளர்  திருப்பதி தலைமையில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, வெடிவைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதில், வட்ட செயலாளர்கள் மகேஸ்வரன், பொன்னர், கலைமணி,  ராஜூ, ஒன்றிய பொருளாளர் வீரமுத்து, பகுதி அவைத்தலைவர் வெங்கடேசன், அரசு வழக்கறிஞர் வெங்கடேசன், திருக்கோயில் அறங்காவலர் கவிதா அல்லித்துறை முத்தையன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் திருப்புகழ் செல்லதுரை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர்  எட்டரை குணா உள்ளிட்ட தொண்டர்கள் உடனிருந்தனர்.

* துறையூரில் நகர கழக சார்பாக அ.தி.மு.க.வினர் பேருந்து நிலையத்தில் இருக்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் செக்கர் ஜெயராமன் முன்னாள் எம்.எல்.ஏ. இந்திராகாந்தி எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய் ஒன்றிய செயலாளர் சேனை செல்வம் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். 

* கரூர் பேருந்து நிலையம் அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தலைப்புச்செய்திகள்