Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு

அக்டோபர் 08, 2020 05:39

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நேற்றுமுதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.பெற்றோரின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என புதுச்சேரி அரசு கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் 10,12ம் வகுப்புகளுக்கு 3 நாட்களும், 9, 11ம் வகுப்புக்கு 3 நாட்களும் என வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாட சந்தேகங்களை தீர்த்து கொள்ள வரும் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமரவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா அச்சம் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்களா? புதுச்சேரி அரசின் முயற்சி கைகொடுக்குமா? என்பது விரைவில் தெரியவரும்.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் கொரோன வைரஸ் தொற்று நாளுக்குள் வேகமாக பரவி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளை தற்போது திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்