Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனுமதியின்றி டிராக்டரில் கொண்டு வந்த வெடி பொருட்கள் பறிமுதல்

அக்டோபர் 08, 2020 05:43

தென்காசி: தென்காசி அருகே அனுமதியின்றி டிராக்டரில் வெடி பொருட்கள் கொண்டு சென்றதால் ஒருவர் கைது செய்யப்பட்டு வெடி பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனையூர் பகுதியில் காவல் ஆய்வாளர் மீனாட்சிநாதன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வெடிமருந்துகள் இருப்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் உரிய அனுமதியின்றி கிணறு தோண்ட வெடிமருந்துகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அனுமதியின்றி வெடிமருந்துகளை ஏற்றி வந்த கோமாதாபுரம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் மகனான கோபால் (55) என்ற நபர் மீது சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவர் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்