Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஆழ்துளை கிணறு: ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வுக்கு மக்கள் நன்றி

அக்டோபர் 08, 2020 09:44

தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள புள்ளிமான் கோம்பை ஊராட்சி ராஜப்பன் கோட்டை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆள்துழை கிணறு அமைத்து கொடுத்த எம்.எல்.ஏ.வுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள புள்ளிமான் கோம்பை ஊராட்சி ராஜப்பன் கோட்டை கிராமத்தில் நீண்ட நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை உடனடியாக கனிவுடன் பரிசீலித்து மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான குடி நீர் தட்டுபாட்டை தீர்க்கும் விதமாக ஆண்டிபட்டி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4.20 லட்சம் நிதி ஓதுக்கியும் அதனை உடனடியாக பணி முடித்து புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பொருத்தி பைப்லைன் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

ராஜப்பன்கோட்டை கிராம மக்களின் நீண்ட நாள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைத்து குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கிய ஆண்டிபட்டி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை அப்பகுதி மக்கள் மனதார பாராட்டினர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜாராம் மற்றும் தி.மு.க. பேரூர் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்