Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆம்பூரில் தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி 

அக்டோபர் 08, 2020 09:53

ஆம்பூர்: ஆம்பூரில் தனியார் தொழிற்சாலை ஊழியரை கொள்ளையன் பின் தொடர்ந்து வந்து பணப்பையை கொள்ளையடித்து செல்லும் காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த மூன்று வருடமாக ஆம்பூர் அடுத்த  பெரியவரிகம் பகுதியில் இயங்கி வரும்  தனியார் காலணி தொழிற்சாலையில் (ஜாப் ஒர்க்) மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தொழில் சாலைக்கு சம்பந்தப்பட்ட இரண்டரை லட்சத்துக்கான காசோலையை எடுத்துக்கொண்டு ஆம்பூர் பைபாஸ் சாலை பகுதியிலுள்ள சிட்டி யூனியன் வங்கியில் காசோலையை மாற்றி ரொக்கப் பணமாக எடுத்துக்கொண்டு கரீம் சாலையிலுள்ள தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அங்கு அலுவலகத்திற்கு வெளியே இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு உள்ளே சென்று தொழிற்சாலை சம்பந்தப்பட்ட பார்சல் வந்துள்ளதா? என தகவல் தெரிந்து கொண்டு வெளியே வந்தார். அதற்குள் இவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர் அங்குள்ள பாதுகாவலரிடம் மறைந்தபடி பேச்சுக் கொடுத்தும் மற்றொரு வாலிபர் சுரேஷின் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 2.50 லட்சம் வைக்கப்பட்டிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் தப்பியோடியுள்ளனர்.

பின்னர் வெளியில் வந்த சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணப்பை இல்லாதது கண்டு அதிர்சசியடைந்தார். அங்கிருந்த பாதுகாவலரிடம் விசாரித்து விட்டு பணப்பையை காணாததால் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்த்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் பணப்பையை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளதை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்