Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வைரலாகும் நக்மா வெளியிட்ட வீடியோ

அக்டோபர் 09, 2020 08:00

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் நடிகையுமான நக்மா, தனது ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நக்மா பதிவிட்ட வீடியோவில் இருக்கும் பெண் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருமகள் என்றும், இவர் பாஜக அரசு செயல்பாடுகளை கடுமையாக விமர்சிப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

2 நிமிடங்கள் 20 நொடிகள் ஓடும் வீடியோவை நக்மா தனது ட்விட்டரில் அக்டோபர் 6 ஆம் தேதி பதிவிட்டார். வீடியோவை, மதிப்புக்குரிய அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் மருமகள் தனது அமைதியை இழந்துவிட்டார் எனும் தலைப்பிட்டு நக்மா பகிர்ந்து இருக்கிறார்.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அதில் இருப்பது வாஜ்பாய் மருமகள் கருனா ஷுக்ளா இல்லை என தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் இருப்பது சமூக ஆர்வலரான அதியா ஆல்வி ஆகும். இவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தனது கருத்துக்களை தெரிவித்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் நக்மா பதிவிட்ட வீடியோவில் இருப்பது வாஜ்பாய் மருமகள் இல்லை என்பதும், அதில் இருப்பவர் சமூக ஆர்வலர் என்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
 

தலைப்புச்செய்திகள்