Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிகள் திறப்பு மறுபரிசீலனை செய்வோம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

அக்டோபர் 09, 2020 08:45

புதுச்சேரி: பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று வந்தால் கண்டிப்பாக இந்த உத்தரவை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம்,''  என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்ததாவது:

புதுச்சேரியில் நேற்றுமுன்தினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் முழுமையாக திறக்கப்படவில்லை. முழுமையாக திறக்கப்பட்டதாக எதிர்கட்சியினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தற்போது பொதுத்தேர்வு எழுத வேண்டும். கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன.

ஆனால் புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் அனுமதியோடும், சந்தேகங்களை கேட்க மட்டும் வர வேண்டும் என்று முடிவெடுத்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பரிட்சார்த்த முறையில் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். 

பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று வந்தால் கண்டிப்பாக இந்த உத்தரவை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம். ஆனால், ஒருசிலர் இதில் அரசியல் செய்து எங்கள் அரசுக்கு களங்கம் விளைப்பதற்காகவும், எங்கள் மீது பழியைப் போடுவதற்காகவும் பலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். அதற்கு பள்ளிகளின் முன் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்