Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு வீரர்கலுக்கு பேரிடர் மீட்பு பாதுகாப்பு பயிற்சி

அக்டோபர் 09, 2020 08:50

பெரம்பலூர்: பெரம்பலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு மீட்பு பயிற்சி வகுப்பின் போது, வருவாய் துறையினர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்  வட்டாட்சியர் அலுவலகம் முன் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் அம்பிகா, உதவி அலுவலர் தாமோதரன் ஆலோசனையின் படி தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்தன் தலைமையில் ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் பேரிடர் காலங்களில் தீயணைப்புத் துறையினரோடு இணைந்து மக்கள் பணியாற்றுவது குறித்து விளக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினரிடம், உள்ள சிறப்பு கருவிகள் மூலம் எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது?. பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்பது. கருவிகளின் பயன்பாடு முடிச்சுகள், முதலுதவி, தீயணைப்புத்துறை கருவிகள் மூலம் பாம்புகளை காயமின்றி பிடிப்பது. வெள்ள அபாய காலங்களில் வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்தி நீரில் சிக்கியவரை எவ்வாறு மீட்பது என்பது குறித்து அவர்களுக்கு தீயணைப்பு துறை பயிற்சி அளித்தனர்.

மேலும் காலி குடங்கள், மரக்கட்டைகள் தெர்மாகோல், வாட்டார் பாட்டில், காலி சிலிண்டர்கள், எவ்வாறு பேரிடர் காலங்களில் தங்களை காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து செயல்முறை விளக்கம் பயிற்சி அளிக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையோடு இணைந்து செயல்பட வருவாய் துறை பணியாளர்கள், வட்டார வளர்ச்சி துறை அலுவலக பணியாளர்கள், பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர்.

இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கௌரி, மண்டல துணை வட்டாட்சியர் சுதாகர், வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் சிலம்பரசன், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஐ.டி.ஐ. மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்