Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

’சமூக நீதியின் உறுதி மிக்க தூண் சாய்ந்து விட்டது’ ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் 

அக்டோபர் 09, 2020 11:54

சென்னை: மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவையடுத்து ‘சமூக நீதியின் உறுதிமிக்க தூண் ஒன்று இன்று சாய்ந்து விட்டது’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவனரும், மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் சமீபத்தில் டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்த அறுவை சிகிச்சையையடுத்து அவர் வீடு திரும்பியிருந்தார்.

இதற்கிடையில், மந்திய அமைச்சர் பஸ்வான் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் சிராக் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பஸ்வானின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பஸ்வான் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதாவது: நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வானின் மறைவால் அவரை இழந்து வாடும் சிராக் பஸ்வான் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஆற்றல் மிகுந்த தலைவனை இந்திய அரசியல் இழந்து விட்டது.

சமூகநீதிப்போராளி ராம்விலாஸ் பாஸ்வான் மறைவெய்திய செய்தி கேட்டு பெருந்துயரத்திற்கு உள்ளானேன். முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற நண்பர், என்னிடமும் மிகுந்த நெருக்கம் காட்டி நேசம் பாராட்டியவர். சேலம் இரும்பாலையைத் தனியாருக்கு விற்கும் முடிவினைக்கைவிட்டு ஆலையின் புதிய விரிவாக்கத்திற்கும் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதீப்பிட்டில் திட்டம் நிறைவேற்ற முன்வந்தவர்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் விரைவில் வீடு திரும்பி சமூக நீதிக்காக பாடுபடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் மறைந்தார் என்று வந்த செய்தி பேரிடியாக என் இதயத்தை தாக்கியது. சமூக நீதியின் உறுதி மிக்க தூண் ஒன்று இன்று சாய்ந்து விட்டது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பிரதமருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்