Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வி.சி.க. பிரமுகரிடம் தகராறு: போலீஸிடம் எஸ்.பி. விசாரணை

அக்டோபர் 09, 2020 12:31

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் நடராஜன், ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த காசிராஜா இருவரும் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணியாமல் வந்த அவினாசி விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் என்பவரை தடுத்து முக்கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்து காவலர் காசிராஜா அவரின் தகவல்களை சேகரித்தார்.

அப்போது சாதி பெயரையும் கேட்டுள்ளார். சாலையில் வைத்து சாதி பெயரை கேட்டதால் ஆத்திரமடைந்த சிவக்குமார் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் இந்த காட்சிகளை வீடியோவாக படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த காட்சி வைரலாக பரவியதை அடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் காவலர் காசிராஜாவை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

தலைப்புச்செய்திகள்