Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறுமி கொலை குற்றவாளிகள் விடுதலை: முடிதிருத்தும் தொழிலாளர் போராட்டம்

அக்டோபர் 09, 2020 12:35

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை கண்டித்து பழனியில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள்  சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் குறும்பபட்டி எனும் கிராமத்தில் கலைவாணி என்ற பன்னிரெண்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து சம்பந்தப்பட்ட  குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும்  பழனியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட  சலூன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்