Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.2650 கோடி சாலை டெண்டர் ரத்து: உத்தரவுக்கு டிடிவி தினகரன் வரவேற்பு

அக்டோபர் 10, 2020 06:20

சென்னை: தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட ரூ.2650 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கிராம சாலைகளை மேம்படுத்துவதாகக் கூறி  பழனிசாமி அரசு விதிகளுக்கு மாறாக நடைமுறைப்படுத்த நினைத்த, சுமார் 2650  கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது. 

அரியர் தேர்வுகளில் பாஸ் ஆனதாக அறிவித்தது, வெளி மாநிலத்தவர் தமிழக அரசின் பணிகளில் அமர்த்தப்பட்டது போன்ற விஷயங்களில் தனது தவறான முடிவுகளுக்காக கடும் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளானதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு  மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும்” என கூறி உள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்