Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனாவுக்கு: 15 தபால்காரர்கள் பரிதாப பலி 

அக்டோபர் 10, 2020 10:01

சென்னை:ஊரடங்கு நேரத்திலும் மக்கள் சேவையை மகேசன் சேவையாக கருதிய தபால்காரர்களில் தமிழகத்தில் 15 பேர் கொரோனாவால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக தபால் தினம் நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. இந்திய தபால் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ம் தேதி முதல் 15ம் தேதி தேசிய அஞ்சல் வாரமும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் உலக தபால் தினம் மற்றும் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 1866-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழமையான தபால் பெட்டி, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தின் அஞ்சல் தலை சேகரிப்பு மையத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதன்மை தபால்துறை தலைவர் செல்வக்குமார் பேசியதாவது: தபால் துறைக்கு கொரோனா ஊரடங்கு காலமான 6 மாதத்தில் 40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் தபால் பட்டுவாடா தொய்வின்றி நடந்தது. இந்த அயராத பணியில் பணியாற்றியபோது தமிழகத்தில் 15 தபால்காரர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். இவ்வாறு அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.   
 

தலைப்புச்செய்திகள்